கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் 1,200க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றனர். பலரை பிணை கைதிகளாக பாலஸ்தீனத்திற்கு பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
வான் வழியாகவும், தரை வழியாகவும் நடத்தப்படும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உண்ண உணவின்றி, தங்குவதற்கு இடமில்லாமல் காசா மக்கள் தவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில், போரை கைவிட வலியுறுத்தி ஸ்பெயின் நாட்டில் உள்ள சான் செபஸ்டியன் கடற்கரையில் கலைஞர்கள் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கூடினர். அவர்கள் போரில் வீழ்ந்து கிடப்பது போன்று, வெட்ட வெளியில் படுத்தவாறு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கலைஞர்களின் இந்த போராட்டம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் நடத்தும் விதத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதை தெரிவிக்கவே இங்கு கூடியதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.