ஒருங்கிணைந்த ஸ்பெயினை வலியுறுத்தி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்டலோனியா தலைநகர் பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேட்டலோனியா தனி நாடாக பிரிந்து செல்வதை தடுக்கும் வகையில் அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நடவடிக்கைகளை ஸ்பெயின் அரசு எடுத்துள்ளது. இந்தச் சூழலில் ஒருங்கிணைந்த ஸ்பெயினை வலியுறுத்தி மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்டலோனியா தலைநகர் பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரிவினையை தூண்டிய கேட்டலோனியா தலைவர் கார்லஸ் பியூஜ்மோண்டை கைது செய்யும்படி வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அமைதியாக இருந்த மக்கள் தற்போது வெகுண்டெழுந்து விட்டார்கள் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளையும் சிலர் பிடித்து வந்தனர்.