சுனிதா வில்லியம்ஸை கூட்டிவர செல்கிறது ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ; விண்வெளி நிலயத்தில் இருப்பவர்களின் நிலை?

ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 என்ற விண்கலமானது 4 இருக்கைகள் கொண்டது. செப்டம்பர் மாதம் 24ம்தேதி விண்வெளிக்கு செல்ல இருக்கும் இந்த விண்கலத்தில் விண்வெளி வீரரான நிக் ஹேக் , அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இருவரும் பயணிப்பார்கள் என்று கூறியிருக்கிறது நாசா
space x crew
space x crew google
Published on

விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் புட்ச் வில்மோர் மற்றும் சுனிதாவில்லியம் இருவரையும் பூமிக்கு அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்கலமானது செப்டம்பர் மாதம் விண்ணில் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் யார் யார் செல்கிறார்கள்? யாருடன் இந்த விண்கலம் திரும்ப பூமிக்கு வரப்போகிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பூமியிலிருந்து செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 என்ற விண்கலமானது 4 இருக்கைகள் கொண்டது. செப்டம்பர் மாதம் 24ம்தேதி விண்வெளிக்கு செல்ல இருக்கும் இந்த விண்கலத்தில் நாசா விண்வெளி வீரரான நிக் ஹேக் மற்றும் ரஷ்ய வீரரான அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இருவரும் பயணிப்பார்கள் என்று கூறியிருக்கிறது நாசா...

நான்கு பேர் பயணிக்கக்கூடிய இந்த விண்கலத்தில், இவர்கள் இருவரைத்தவிர காலியாக இருக்கும் மற்ற இரு இருக்கைகளில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரரின் எடைகொண்ட பொருட்களுடன் விண்வெளிக்கு செல்ல இருக்கிறது.

காரணம் வளிமண்டலத்தைத்தாண்டி இந்த விண்கலம் செல்லும்பொழுது விண்கலத்தின் எடைக்குறைவாக இருந்தால், ஒன்று செயலிழக்கலாம் அல்லது பழுதடையலாம். ஆகவே இதைத் தவிர்க்கும் பொருட்டு வீரர் இருவர்களின் எடைகொண்ட பொருட்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ-9 விண்வெளிக்குப் பறக்கத் தயாராக இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இதில் நமக்கு ஒரு சந்தேகம் வரலாம்... விண்வெளியில் இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கையில் சேகரிக்கப்படும் குப்பைகள் என்னவாகும்? ஆக்ஸிஜன் தீர்ந்துவிட்டால் என்ன செய்வார்கள் என்று பல யோசனைகளுக்கு விஞ்ஞானிகள் கொடுத்த தகவல்கள் இதோ....

விண்வெளி நிலையத்தின் குட்பை என்பது விண்வெளி வீரர்கள் அணிந்துகொள்ளும் உடை, மற்றும் அவர்களின் உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள்தான். இதில் விண்வெளி வீரர்கள் உடுத்தும் உடையானது யூஸ் அன்ட் த்ரோ மாதிரி... அதாவது, அவர்கள் அணிந்துகொள்ளும் உள் ஆடைகளை இரு தினங்களுக்கு ஒரு முறை என்றும், பயிற்சியின்போது ஒரு வாரம் என்று உடைகளை அணிந்துகொள்வார்கள் . அதன்பிறகு அந்த ஆடைகள் குப்பையில் சேர்த்துவிடுவார்கள். அது போல் விண்வெளி நிலயத்தில் தங்கியிருக்கும் வீரர்கள் குளிப்பது கிடையாது... காரணம் அங்கு எந்த பொருட்களுக்கும் எடை என்பது இல்லை என்பதால் அனைத்துப்பொருட்களும் மிதக்கும்... இதில் தண்ணீரும் விதிவிலக்கல்ல.... அதுவும் உருண்டை திவல்களாக மிதக்கும்... ஆகவே வீரர்கள் ஒரு பாத்டவல் கொண்டு தங்களின் உடலைத் துடைத்துக்கொள்வார்கள். மேலும் அவர்கள் தினமும் சாப்பிடும் கழிவுகள் அதன் பேக்குகள் உள்ளவற்றையும் குப்பைகளாகச் சேர்த்து வைத்துக்கொள்வார்கள் . அதேபோல் மனித கழிவுகளை ஷக்‌ஷன் என்ற உறிஞ்சும் கருவின் உதவியால் உறிஞ்சப்பட்டு ஒரு டேங்கில் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.

இது இப்படி இருக்க... மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்று, விண்வெளி நிலயத்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் நைட்ரஜன் கலந்த ஆக்ஸிஜனை சுமந்துக்கொண்டு பூமியிலிருந்து கார்கோ விண்கலமானது விண்வெளிக்குச் செல்லும்.

அந்த விண்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பும் சமயம் விண்வெளி வீரர்கள் சேகரித்து வைத்திருக்கும் மனித கழிவு அடங்கிய டேங்குகள் மற்றும் குப்பைகளை எடுத்துக்கொண்டு பூமி திரும்பும். திரும்பும் வழியில் வளிமண்டலத்தைக் கடக்கும் சமயம் குப்பைகள் அங்குக் கொட்டப்படும்.

கொட்டப்பட்ட குப்பைகள் வளிமண்டலத்தை உராயும் பொழுது அங்கு முற்றிலும் எரிந்து சாம்பலாக மாறி காற்றில் கலந்து விடும். இப்படிதான் அங்கிருக்கும் கழிவுகள் அழிக்கப்படுகிறது.

அது போன்று விண்வெளியில் தங்கி இருக்கும் வீரர்களின் உடலிலிருந்து வெளியாகும் வியர்வை மற்றும் சிறுநீர் ஆகியவை மறு சுழற்சி செய்யப்பட்டு அதிலிருந்து ஆக்ஸிஜன் எடுக்கப்பட்டு மற்ற கழிவுகள் குப்பைகளாக விண்வெளியில் கொட்டப்படுகிறது.

ஆக... நாம் நினைப்பது போன்று விண்வெளி நிலையத்தில் தங்கி பணிபுரிவதென்பது சாதாரண செய்தியல்ல... இதற்குப் பின் பல விண்வெளி வீரர்களின் தியாகமும் அடங்கியுள்ளது என்பது புரியவருகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com