தென் கொரியாவில் ஆயிரக்கணக்கான பன்றிகளை கொன்று குவித்ததால் ஆறு ஒன்று சிவப்பாக மாறியுள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தங்கள் நாட்டில் பரவுவதை தடுக்கும் முயற்சியாக சுமார் 47 ஆயிரம் பன்றிகளை தென் கொரிய அதிகாரிகள் கொன்றனர். எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட பன்றிகள் புதைக்கப்பட்ட இடத்தில் பலத்த மழை பெய்ததால் பன்றிகளின் ரத்தம் தென் கொரிய எல்லையில் ஓடும் இம்ஜின் ஆற்றில் கலந்தது.
இதனால் ஆறு முழுவதும் சிவப்பாக மாறியுள்ளது. ஆற்றில் கலந்துள்ள ரத்தம் பிற விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்கொரிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.