தென் கொரியாவில் உச்சத்தில் கொரோனா பாதிப்பு - விறுவிறுப்பாக நடைபெறும் அதிபர் தேர்தல்!

தென் கொரியாவில் உச்சத்தில் கொரோனா பாதிப்பு - விறுவிறுப்பாக நடைபெறும் அதிபர் தேர்தல்!
தென் கொரியாவில் உச்சத்தில் கொரோனா பாதிப்பு - விறுவிறுப்பாக நடைபெறும் அதிபர் தேர்தல்!
Published on

தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில், அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தென் கொரியாவில் அண்மைக்காலமாக ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில், தினசரி தொற்று அங்கு மூன்றரை லட்சத்துக்கும் மேலாக பதிவாகி வருகிறது.

இவ்வாறு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் சமயத்தில், அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் மொத்தம் 14 வேட்பாளர்கள் களத்தில் இருக்கும் நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

காலை 6 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முகக்கவசம் அணிந்து வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர். முதல் மூன்று மணி நேரத்தில் 8 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com