தென்கொரியாவில் 20 பேர் பயணித்த மீன் பிடி படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
தென்கொரியாவில் மீன் பிடி படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 2 மாலுமிகள் மற்றும் 20 பேருடன் பயணித்த போது சியோல் நகரின் தெற்கே உள்ள கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் 19 கப்பல்கள் மூலம் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 13 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளன. மீட்கப்பட்ட 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரை காணவில்லை, அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்கொரியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 15 பேர் பலியான படகு விபத்திற்கு பிறகு, இந்த விபத்து மிக மோசமான விபத்தாக கூறப்படுகிறது. கொரிய தீபகற்ப கடல் பகுதியில் நிலவும் குளிரே இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.