தெ.ஆ. | பண்ணைக்குள் நுழைந்த கறுப்பின பெண்கள்.. சுட்டுக் கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய உரிமையாளர்!

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையரின் பண்ணைக்குள் உணவு சேகரிக்கச் சென்ற கறுப்பின பெண்கள் இருவர், சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பன்றிகள்
பன்றிகள்எக்ஸ் தளம்
Published on

தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு ஜோஹன்னஸ்பர்க்கின் லிம்போபோ மாகாணத்தில் ஜகாரியா ஜோஹன்னஸ் ஆலிவியர் என்ற வெள்ளை இன பண்ணையாளருக்குச் சொந்தமாக பண்ணை ஒன்று உள்ளது. இந்தப் பண்ணையில், தூக்கி எறியப்படும் பொருள்களை எடுப்பதற்காக அவ்வப்போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் திருட்டுத்தனமாகச் செல்வதுண்டு. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த மரியா (44) மற்றும் லொகாடியா (35) என்ற இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் திரும்பி வரவில்லை. அந்தப் பண்ணைக்குள்ளேயே அவர்கள் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பன்றிகளுக்கு உணவாக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், இரண்டு பெண்களின் உடல்களும் பன்றிகளால் சாப்பிட்டு மிச்சம் வைக்கப்பட்டு, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில், பண்ணை உரிமையாளர் மற்றும் அவரது இரண்டு தொழிலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இரண்டு பெண்களையும் சுட்டுக்கொன்று, அவர்களது உடல்களை வெட்டி பன்றிக்கு உணவாக்கியிருப்பதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ‘இளமைக்கு போலாம் வாங்க...’ - இஸ்ரேல் Time Machine எனக்கூறி ரூ.35 கோடி மோசடி.. தலைமறைவான உ.பி. ஜோடி!

பன்றிகள்
கறுப்பின சிறுமிக்கு நேர்ந்த அவமானம்! 19 மாதங்களுக்கு பின் மன்னிப்பு கோரிய ’ஜிம்னாஸ்டிக் அயர்லாந்து’

இந்தச் சம்பவம், நாட்டின் வெகுகாலமாக நிலவும் இனவாத, பாலின பாகுபாட்டின் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டிருப்பதுடன், காவல்துறை விசாரணையில் பண்ணையாளர், மேற்பார்வையாளர், தொழிலாளி என மூன்று பேர் மீதான கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின்போது, அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பழைய கெட்டுப்போன பொருள்களை ஒரு டிரக்கில் கொண்டுவந்து பண்ணைக்குள் கொட்டிவிட்டுச் சென்றதையடுத்து, இந்த பெண்கள் அங்கு உணவுத் தேடி சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

பண்ணையின் உரிமையாளர், அத்துமீறி யார் பண்ணைக்குள் நுழைந்தாலும் சுட்டுக் கொல்லும்படி தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததும், தெரிய வந்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற வாயிலில், ஏராளமான கறுப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: உபியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர் குடும்பம்.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவமா? யோகி அரசு விசாரணை!

பன்றிகள்
கறுப்பின சர்ச்சைக்கு மன்னிப்பு கோரியது இங்கிலாந்து கால்பந்து சங்கம்

இதுகுறித்து கொல்லப்பட்ட பெண்ணின் மகன் ரந்தி மக்கதோ, ”தனது தாயின் வாழ்வு இவ்வளவு கொடூரமாக முடியும் என கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. தனது நான்கு குழந்தைகளுக்கும் பசியாற்ற ஏதாவது கிடைக்காதா என்று தேடித்தான் தனது தாய் அந்த பண்ணைக்குச் சென்றிருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தென்னாப்பிரிக்காவின் நில உரிமையில் நீடித்து வரும் ஏற்றத்தாழ்வுகளின் பரந்த பிரச்னையைப் பற்றி பேசுகிறது. நிறவெறியினபோது, ​​பல கறுப்பின மக்கள் தங்கள் நிலத்திலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், இன்று பெரும்பாலான பெரிய வணிகப் பண்ணைகள் வெள்ளையர் உரிமையின் கீழ் இருப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கிராமப்புறங்களில் உள்ள பல கறுப்பின மக்கள் தொடர்ந்து வறுமையில் வாழ்வதாகவும், பண்ணைகளில் உணவுக்காக துப்புரவுத் தொழிலை நாடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: தலைமைச் செயலகத்தின் 3-வது மாடியில் இருந்த குதித்த துணை சபாநாயகர்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு!

பன்றிகள்
இங்கிலாந்து அரண்மனையில் முதல்முறையாக கறுப்பின அதிகாரி நியமனம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com