சோமாலியாவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சோமாலியா தலைநகர் மொகாதிஷூவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சக்தி வாய்ந்த வெடிகுண்டை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இந்த குண்டுவெடிப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான உயிர் சேதம் சோமாலியாவில் ஏற்பட்டது. இதில் சுமார் 300 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குண்டுவெடிப்பு நடைபெற்ற பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக அவர்களில் பலர் விமானம் மூலம் துருக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ராணுவம், காவல்துறை மற்றும் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.