ரெஸ்ட்ராண்ட் ஆன விமானங்கள் : முண்டியடித்துக்கொண்டு புக்கிங் செய்த பயணிகள்..!

ரெஸ்ட்ராண்ட் ஆன விமானங்கள் : முண்டியடித்துக்கொண்டு புக்கிங் செய்த பயணிகள்..!
ரெஸ்ட்ராண்ட் ஆன விமானங்கள் : முண்டியடித்துக்கொண்டு புக்கிங் செய்த பயணிகள்..!
Published on

கொரோனா எதிரொலியால் சேவையில்லாத விமானங்கள் மூலம் மதிய உணவு மற்றும் இரவு உணவை விற்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு நாடுகளும் சர்வதேச விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் ஏராளமான விமானத்துறை ஊழியர்கள் பணியை இழந்துள்ளனர். அத்துடன் அனைத்து ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் வருமான இழப்பில் சிக்கியுள்ளன. இந்நிலையில் புதுமையான நடவடிக்கையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சேவையில் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தங்கள் விமானங்களில் மதிய உணவு மற்றும் இரவு உணவை விற்பதற்கு முடிவு செய்துள்ளது.

அதன்படி, உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ஜம்போஸ் விமானத்தில் வரும் அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மதிய உணவு மற்றும் இரவு உணவு விற்கப்படும் என ஆன்லைனில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அரை மணி நேரத்தில் அனைத்து உணவு டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர மற்ற விமானங்களிலும் உணவுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com