டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், SpaceX நிறுவனருமான எலான் மஸ்க், பத்திரமாக தரையிறங்கி, அடுத்த சில நிமிடங்களில் வெடித்து சிதறிய SpaceX நிறுவனத்தின் சீரியல் நெம்பர் 10 ஸ்டார்ஷிப் ராக்கெட் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “RIP SN10, honorable discharge” என தனது ட்வீட் மூலம் அந்த ராக்கெட்டுக்கு கவுரவம் சேர்த்துள்ளார்.
டெக்சாஸில் மிக உயரமாக பறக்கவிட்டு இந்த ராக்கெட் சோதனையிடப்பட்டது. அந்த முயற்சி வெற்றியடைந்த நிலையில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. பத்திரமாக தரையிறங்கிய ராக்கெட், லேண்டான 8 நிமிடங்களில் வெடித்து சிதறியது.
இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் ஆட்களோடும், ஆளில்லாமலும் பாயும் எனவும். சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்ளுக்கும் இதன் மூலம் பயணிக்கலாம் என மஸ்க் தெரிவித்திருந்தார். தற்போது இந்த ராக்கெட்டுகளை வெள்ளோட்டம் பார்க்கும் பணிகளை SpaceX மேற்கொண்டு வருகிறது.
SN19 வரையிலான ராக்கெட்டுகளை அசெம்பிள் செய்து வருகிறது SpaceX. நாசாவிற்காகவும், வணிக ரீதியாகவும் இந்த ஸ்டார்ஷிப் இயக்கப்பட உள்ளன.