புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு

புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு
புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு
Published on

புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலகசுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, “ புகைப்பிடிக்கும் நபர்களுக்கு கேன்சர், இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 50 சதவீதம்
இருப்பதோடு, இது போன்ற நபர்கள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகும் போது, அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.” என்றார்.

மேலும் பேசிய அவர், “ உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளும் புகையிலைக்கு எதிரான பிரசாரத்தில் அனைத்து நாடுகளும் பங்கு கொண்டு, புகையிலை இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். புகையிலை பழக்கமுள்ளவர்களை அதிலிருந்து வெளியே வர தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

‘கமிட் டு குயிட் டுபக்கோ’ பிரசாரத்தில், புகையிலை பழக்கத்தில் இருந்து வெளியேற உதவும் இலவசமாக கிடைக்கும் டூல் கிட்டை 5 மாதங்களில் கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறாக முன்னெடுக்கப்படும் பிரசாரத்தின் வாயிலாக ஏராளனமான மக்கள் தங்களது வாழ்கையை மீட்டெடுத்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் உதவித் தேவைப்படுகிறது.

புகையிலைக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு முன்னெடுக்கும் பிரசாரம் 29 நாடுகளில் நேரடியாக செயல்படுகிறது. அதன் வழியாக சுகாதார அமைப்பு செயல்படுத்தும் நடவடிக்கைகளான, தேசிய விழிப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுத்தல், புதிய டிஜிட்டல் டூல் கிட்களை வெளியிடுதல் உள்ளிட்டவற்றிற்கு அந்த நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளது. டூல்கிட் வழியாக தினமும் கிடைக்கும் அறிவுரைகள் 6 மாதங்களில் மக்களை புகையிலை பழக்கத்தில் இருந்து வெளிவர உதவுகிறது. இவை வாட்ஸ் அப், வைபர், வீ சாட் உள்ளிட்டவற்றில் கிடைக்கிறது.” என்றார்.

உலக அளவில் தோராயமாக, 39 சதவீத ஆண்களும், 9 சதவீத பெண்களும் புகையிலையை பயன்படுத்துகின்றனர். அதிகபட்சமாக யூரோப்பில் 26 சதவீத மக்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர். அரசு முறையான நடவடிக்கைகளை எடுக்க வில்லை என்றால் இந்த 2025 ஆம் ஆண்டில் வெறும் 2 சதவீதமாக மட்டுமே குறையும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com