12ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் சமத்தாக வேலை செய்த செல்போன்! வீடியோ

12ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் சமத்தாக வேலை செய்த செல்போன்! வீடியோ
12ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் சமத்தாக வேலை செய்த செல்போன்! வீடியோ
Published on

ஸ்கை டைவ் செய்த நபரின் பாக்கெட்டில் இருந்து விழுந்த ஐ போன் பெரிய பாதிப்பு ஏதுமின்றி வேலை செய்துள்ளது. சுமார் 12ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தும் செல்போன் வேலை செய்ததை பலரும் ஆச்சரியாக பதிவிட்டுள்ளனர்.

கையில் இருந்து செல்போன் தவறி விழுந்தாலே நமக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்து போகும். டிஸ்பிளே உடைந்து இருக்குமோ என்ற பரபரப்புடன் போனை கையில் எடுப்போம். சில செல்போன்களின் டிஸ்பிளேக்கள் போனின் விலையில் பாதி இருக்கும். அதனால் புதிய செல்போனை வாங்க வேண்டிய நிலையும் ஏற்படும். ஆனால் இங்கு ஒருவர் வானத்தில் பறந்துகொண்டு தன்னுடைய செல்போனை தவறிவிட்டுள்ளார். ஆனால் அவரது செல்போன் டிஸ்பிளே உடைந்து இருந்தாலும் சமத்தாக வேலை செய்கிறது. கிட்டத்தட்ட 12 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து தன்னுடைய ஐ போனை தவறவிட்டார் கோடி மாட்ரோ.

அமெரிக்காவைச் சேர்ந்த கோடி மாட்ரோ, தன்னுடைய நண்பருடன் இணைந்து அரிசோனா டெசார்ட் பகுதியில் ஸ்கை ட்வைச் செய்திகொண்டிருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த ஐபோன் தவறி காற்றில் பறந்தவாறே கீழே விழுந்தது. நண்பரின் கேமராவில் இந்தக்காட்சி பதிவாகியுள்ளது. குறிப்பிட்ட செயலி மூலம் செல்போனை தேடிக்கண்டுபிடித்துள்ளார் கோடி மாட்ரோ. டிஸ்பிளே உடைந்து இருந்தாலும் செல்போன் வேலை செய்துள்ளதை பார்த்து அவர் ஆச்சரியமடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by @kodymadro

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com