பல்கலைக்கழக வளாககத்தில் ஹோலி கொண்டாடிய மாணவர்களை, மன்னிப்பு கடிதம் எழுத பாகிஸ்தானின் சிந்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சிந்து பல்கலைக்கழக துணைவேந்தர் பதே முகமது பர்பாத், பத்து மாணவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதித் தர வேண்டும் என்று தெரிவித்தார். பாகிஸ்தானின் மற்ற பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடுகையில், சிந்துபல்கலைக்கழகத்தில் அதிக எண்ணிக்கையிலான இந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிவதாகத் தெரிவித்த அவர், அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் இணைந்து மதநல்லிணக்கத்துடன் செயல்படுவது அவசியம் என்றும் தெரிவித்தார். ஆனால், கடந்த காலங்களில் ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.