அமெரிக்க விமானப்படையில் டர்பனுடன் பணியாற்ற சீக்கியருக்கு அனுமதி

அமெரிக்க விமானப்படையில் டர்பனுடன் பணியாற்ற சீக்கியருக்கு அனுமதி
அமெரிக்க விமானப்படையில் டர்பனுடன் பணியாற்ற சீக்கியருக்கு அனுமதி
Published on

அமெரிக்க விமானப்படையில் டர்பன் அணிந்து பணியாற்ற, சீக்கிய வீரருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஹர்பீரிந்தர் சிங் பஜ்வா, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான இவர், கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க விமான படையில் சேர்ந்தார். அங்கு வீரர்கள் தாடி வைக்கவும், டர்பன் அணியவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீக்கிய நடைமுறைகளைப் பின்பற்ற தனக்கு டர்பன் அணியவும் தாடி வளர்க்கவும் அனுமதி வேண்டும் என்று பஜ்வா கோரிக்கை வைத்தார்.

அமெரிக்க சீக்கியர் முன்னாள் படை வீரர்கள் சங்கமும், அமெரிக்க மனித உரிமை சங்கமும் இணைந்து அங்கீகாரம் அளித்ததை தொடர்ந்து, டர்பன் அணிந்தும், தாடி வைத்தும் முழு நேர பணியில் ஈடுபட பஜ்வாவுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்க விமானப்படையில் இதுபோன்ற அனுமதியை பெற்ற முதல் சீக்கியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

அங்கு காவல்துறையில் பணியாற்றும் சீக்கியர்களுக்கு, டர்பன் அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமானப்படையில் இப்போதுதான் முதன்முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com