பாக்.கில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு: 8 பேர் கைது!

பாக்.கில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு: 8 பேர் கைது!

பாக்.கில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு: 8 பேர் கைது!
Published on

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய இளம் பெண் மீட்கப்பட்டார். இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில், லாகூர் அருகில் உள்ள நங்கனா சாகிப் பகுதியைச் சேர்ந்த 19 வயது சீக்கிய இளம் பெண் ஒருவர், கடத்தப்பட்டார். அவர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலையிட வேண்டும் என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

அதில் கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை, ‘எங்கள் வீட்டுக்குள் சில குண்டர்கள் புகுந்து என் மகளை கடத்திச் சென்றனர். அவரை கொடுமைப்படுத்தி கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றி, திருமணம் செய்து கொடுத்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோஷா ஆகியோர் இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவ வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த கட்டாய மதமாற்றத்துக்கு பாகிஸ்தான் சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவரும், ஷிரோமணி அகாலி தள எம்எல்ஏவுமான மஞ்சிந்தர் சிங் சிர்சாவும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த புகாரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கும் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சீக்கிய பெண்ணை, போலீசார் மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக 8 பேரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com