சியாரா லியோன் நாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் அமைச்சர் எலெனோரோ ஜோகோமை தெரிவித்துள்ளார்.
இருவாரங்களுக்கு முன் தலைநகர் ஃபீரிடவுன் அருகே உள்ள புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து 14 நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 450 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. 600 பேரின் கதி என்னவானது என தெரியவில்லை என்று மீட்பு மற்றும் நிவாரணப் படையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் புதையுண்டு போனதாக அந்நாட்டின் அமைச்சர் எலெனோரோ ஜோகோமை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கனமழை காரணமாக ஒரு சில இடங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.