விடுதியில் பெண் தனியாக தங்கக்கூடாதா..?

விடுதியில் பெண் தனியாக தங்கக்கூடாதா..?
விடுதியில் பெண் தனியாக தங்கக்கூடாதா..?
Published on

சிங்கப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு விடுதியில் தனியாக தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நுபூர் சரஸ்வத். பாடகி, கவிதாயினி என பன்முகத்திறமைக் கொண்ட இவர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இந்தியாவிற்கு அடிக்கடி வருவதுண்டு. பொதுவாக தனியாக வரும் அவர், இங்குள்ள விடுதிகளில் தங்கி நிகழ்ச்சிகளை முடித்துக்கொடுத்து விட்டு பின்னர் சிங்கப்பூருக்கு திரும்புவது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த அவர், பிரபலமான இணையதளம் மூலமாக ஐதராபாத் விடுதியில் அறை ஒன்றை முன்பதிவு செய்திருந்தார். அங்கு சென்றபோது, இவர் தனியாக தங்கவுள்ளதை ஏற்றுக்கொள்ளாத விடுதி நிர்வாகம், அவருக்கு ரூம் தர மறுத்தது. இதனால் செய்வதறியாமல் தவித்த நுபூர், நடுஇரவில் எங்கு போய் தங்குவது என்றும் ஓட்டல் நிர்வாகத்தினரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தனியாக பெண்களை அனுமதிக்க கூடாது என்பது நிர்வாகத்தின் விதி எனக்கூறி, அவரை நிர்வாகத்தினர் வெளியேற்றியுள்ளனர். இதனால் மனமுடைந்த நுபூர் இவ்விவகாரம் தொடர்பாக டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பதவி செய்தார். நாட்டில் பெண்கள் தனியாக செல்லக்கூடாதா....?, என்னைத் துணைத்தேட கட்டாயப்படுத்துவதற்கு இவர்கள் யார்....? என்ற ரீதியில் அவர் பதிவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் வைரலாகி பரவியதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக பல பெண்களும், மகளிர் அமைப்புகளும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன. தனியாக தற்போது பெண்கள் உலகம் முழுவதும் சுற்றிவர ஆரம்பித்துள்ள நிலையில், ஓட்டலில் அறை கொடுக்கக்கூட இந்தியாவில் யாரும் தயாராக இல்லை எனவும் நுபூர் வேதனை தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com