சுத்துப்போட்ட முதலைக்கூட்டம்.. சிக்கிய சிங்கம் தப்பியது எப்படி? திக் திக் நொடிகள்!

சுத்துப்போட்ட முதலைக்கூட்டம்.. சிக்கிய சிங்கம் தப்பியது எப்படி? திக் திக் நொடிகள்!
சுத்துப்போட்ட முதலைக்கூட்டம்.. சிக்கிய சிங்கம் தப்பியது எப்படி? திக் திக் நொடிகள்!
Published on

விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக்கப்படுவது தொடர்ந்து வருவதுதான். அந்த வகையில் காட்டுக்கே ராஜா என அழைக்கப்பட்டு வரும் சிங்கத்தையே முதலைக் கூட்டம் ஒன்று சுத்துப்போட்ட வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அந்த வகையில் கென்யாவில் உள்ள மசாய் மாரா தேசிய பூங்கா ஒன்றில் ஆண்டனி பெசி என்பவரால் எடுக்கப்பட்ட வீடியோ compass media என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், இறந்த நீர்யானை ஒன்றின் சடலத்தின் மீது நின்றிருந்த சிங்கத்தை தப்பிக்க விடாமல் இருப்பதற்காக சுமார் 40 முதலைகள் சிங்கத்தை சுற்றி வளைத்து காத்திருக்கின்றன. சில நொடிகள் கழித்து நீர்யானையின் மீது நின்றுக் கொண்டிருந்த அந்த சிங்கம் சட்டென முதலை கூட்டத்துக்கு இடையே தண்ணீரில் குதித்து சடாரென நீந்தி கரைக்கு சென்று தன்னை தப்பிக்கச் செய்திருக்கிறது.

அந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், அதிர்ந்துபோனதோடு இக்கட்டான சூழாலை அந்த சிங்கம் கையாண்ட வகையை நினைத்து பூரித்துப்போயிருப்பதாக கமெண்ட்டில் பதிவிட்டிருக்கிறார்கள்.

மேலும், இது செய் அல்லது செத்து மடி என்ற சொற்றொடருக்கு ஏற்ப சிங்கத்தின் செயல்பாடு இருந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதுபோக, இறந்துப்போன அந்த நீர்யானையின் சடலம் மட்டும் இருந்திருக்காவிடில் சுற்றி வளைத்து நின்ற அந்த முதலைகள், முன்பு இருப்பதை காட்டிலும் மேலும் முரட்டுத்தனமாக இருந்திருக்கக் கூடும் என கூறியிருக்கிறார்கள்.

ALSO READ:  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com