நேபாளத்தில், கடந்த 2018-ஆம் ஆண்டு மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, கே.பி.ஷர்மா ஒலி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரசாண்டா, ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவரானார். இரு தலைவர்களுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்தார் ஒலி. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நேபாள உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தை 7 நாட்களுக்குள் கூட்டவும், எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபாவை பிரதமராக நியமிக்கவும் உத்தரவிட்டது.