'அமெரிக்காவின் சதியே காரணம்' | குற்றஞ்சாட்டிய ஷேக் ஹசீனா.. மறுத்த மகன்.. வங்கதேசத்தில் நடப்பது என்ன?

அமெரிக்கா குறித்து ஷேக் ஹசீனா கூறியதாக வெளியான தகவலை, அவரது மகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
சஜீத் வாஜிப், கிளாட்சன் சேவியர், ஷேக் ஹசீனா
சஜீத் வாஜிப், கிளாட்சன் சேவியர், ஷேக் ஹசீனாஎக்ஸ் & புதிய தலைமுறை
Published on

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.

என்றாலும், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரை குறிவைத்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. குறிப்பாக, நாடு முழுவதும் 52 மாவட்டங்களில் அங்கு சிறுபான்மையின பிரிவைச் சேர்ந்த இந்து, கிறிஸ்தவ, புத்த மதத்தினரைக் குறிவைத்து குறைந்தபட்சம் 200க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தஞ்சம் அடைந்திருக்கும் ஷேக் ஹசீனா, தன் கட்சியினருக்கு எழுதியிருப்பதாகக் கூறப்படும் கடிதத்தில், “தன் ஆட்சியைக் கலைப்பதற்கு அமெரிக்கா சதி செய்ததாகவும், இதை வன்முறையின்போது உரையாற்றி தெரிவிக்க இருந்ததாகவும், ஆனால் அதற்கு போதிய நேரமில்லாததால் இந்தியாவிற்கு சென்றதாகவும், எனினும் தாம் திரும்பி வருவதாகவும், தமது கட்சி மீண்டும் எழும்” எனவும் அதில் அவர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க; 53,000 கோடி நஷ்டம்..! ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி..பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த அதானி குழுமம்!

சஜீத் வாஜிப், கிளாட்சன் சேவியர், ஷேக் ஹசீனா
”எல்லாமே அமெரிக்காவின் சதி; என் பேச்சை திரித்து வன்முறையை உருவாக்கினார்கள்”-மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா

ஹசீனாவின் இந்த கருத்தால் இந்தியா - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படலாம். ஹசீனாவிற்கு தஞ்சம் கொடுத்ததால் இந்தியா வேறுதிட்டம் தீட்டுவதாக வங்கதேசத்தில் சந்தேகிக்கப்படலாம். வங்கதேசத்தில் உருவாகியுள்ள இந்திய எதிர்ப்பு மனநிலை, மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகலாம். ஹசீனாவின் அறிக்கையும் இந்துக்கள் போராட்டமும் ஒருங்கிணைத்து பார்க்கப்படலாம். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் சிக்கலை உருவாக்கும் அபாயமும் உள்ளது” எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் பேசுபொருளாகி இருக்கும் நிலையில், பேராசிரியர் கிளாட்சன் சேவியர், “ஷேக் ஹசீனாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. அவரது கருத்து குறித்து நிறைய விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், அமெரிக்கா குறித்து ஷேக் ஹசீனா கூறியதாக வெளியான தகவலை, அவரது மகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீத் வாஜிப் வெளியிட்ட பதிவில், ராஜினாமா அறிவிப்பின்போது தன் தாய் ஷேக் ஹசீனா கூறியதாக வெளியான ஊடக செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என குறிப்பிட்டுள்ளார். தன் தாயை தொடர்புகொண்டு பேசி இதை உறுதிபடுத்தி உள்ளதாக தெரிவித்துள்ள சஜீத் வாஜிப், டாக்காவில் இருந்து புறப்படுவதற்கு முன்பும், சென்றபிறகும் இதுபோன்ற அறிக்கையை அவர் வெளியிடவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வங்கதேசம்|வன்முறையை எதிர்கொள்ளும் இந்துக்கள்.. இடைக்கால அரசு சொல்வது என்ன? கிடைக்குமா தீர்வு?

சஜீத் வாஜிப், கிளாட்சன் சேவியர், ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா பதவி விலகிய பின்பும் தொடர்ந்த வன்முறை... 100-க்கும் மேற்பட்டோர் கொலை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com