அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய 30வது வயதில், 12 வயது சிறுமியுடன் ஏற்பட்ட நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்,
அமெரிக்காவின் மிகப்பெரிய ஆசிரியர் சங்கமான தேசிய கல்வி சங்கத்தில் ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது 12 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது குறித்து அவர் பேசியுள்ளார். ஆசிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடியிருந்த அரங்கில் பேசிய ஜோ பைடன் தனது உரையின் போது, கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணை அடையாளம் கண்டுகொண்டார்.
உடனே அவர் தனது பேச்சை சிறிது நேரம் இடைநிறுத்தினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பின், பேச்சை தொடங்கிய அவர், அந்த பெண்ணை நோக்கி, நீங்கள் எனக்கு ஹாய் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, இந்த பெண் எனக்கு ஒரு மோசமான காரியத்தைச் செய்ய உதவியதாக தெரிவித்தார். இதை கேட்டு அங்கிருந்த பார்வையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் சிரித்து ஆரவாரம் செய்தனர்.
ஆனால் தான் எதை பற்றி பேசுகிறோம் என்பதை பைடன் கூறவில்லை. இந்நிலையில் ஜோ பைடனுக்கு மனநோய் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.