ஜப்பான்: அனிமேஷன் படங்களால் மிளிரும் பாதாள கழிவுநீர் தொட்டியின் மூடிகள்..!

ஜப்பான்: அனிமேஷன் படங்களால் மிளிரும் பாதாள கழிவுநீர் தொட்டியின் மூடிகள்..!
ஜப்பான்: அனிமேஷன் படங்களால் மிளிரும் பாதாள கழிவுநீர் தொட்டியின் மூடிகள்..!
Published on

ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள டோக்கோரோசாவா நகரின் வீதிகளில் உள்ள பாதாள கழிவுநீர் தொட்டியின் மூடியில் இரவு நேரங்களில் மிளிரும் வகையிலான அனிமேஷன் படங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் திறக்கப்பட உள்ள பொழுதுபோக்கு வளாகத்திற்கான புரொமோஷனாக இந்த அனிமேஷன் படங்கள் டோக்கோரோசாவாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நியான் ஜெனிசிஸ் எவாஞ்சலியன் மற்றும் குண்டம் போன்ற பிரபல ஜப்பானிய அனிமேஷன் தொடர்களின் கதாபாத்திரங்களின் படங்கள் மூடியின் மீது பொருத்தப்பட்டுள்ளன.

‘மொத்தமாக 27 வடிகால் வசதியின் முடிகளின் மீது அனிமேஷன் படங்கள் அட்டைப்படமாக வைக்கப்பட்டுள்ளன. சோலார் எனர்ஜியை இயங்கும் இதில் எல்.ஈ.டி விளக்குகளால் ஒளிர்கின்றன. மாலை 5 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த விளக்குகள் ஒளிரும்’ என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

‘ பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி கால்நடையாக தான் நடந்து  செல்வேன். தற்போது இந்த அனிமேஷன் பட ஏற்பாட்டினால் களைப்பு தெரியாமல் வீட்டிற்கு செல்ல முடிகிறது’ என தெரிவித்துள்ளார் இளம் பெண்ணான கோட்டாரோ கொடைரா.

இதனை பார்க்க தற்போது அந்த பகுதியில் அதிகளவிலான மக்கள் திரண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com