பாகிஸ்தானில் நிதி நெருக்கடி காரணமாக சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் ஏலத்திற்கு வர உள்ளன.
பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அரசு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக லாகூர் அரசு விலங்கியல் பூங்காவிற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. உணவு வழங்கவும் பராமரிக்கவும் நிதி இல்லாததால் விலங்குகளை ஏல முறையில் விற்க உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக 12 புலிகள் வரும் 11ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாகவும் இதில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மக்கள் தேநீர் அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என அண்மையில் அந்நாட்டு அமைச்சர் கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.