காசாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். ஜபாலியா என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றை குறிவைத்து குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை எதுவும் விடுக்காமல் பொதுமக்கள் இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
எனினும், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள இஸ்ரேல் படையினர், ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருக்கும் பகுதிகள் மட்டுமே குறிவைக்கப்படுவதாகவும், அதன் ஒரு நடவடிக்கையாகவே ஜபாலியாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உடல்கள், காசாவில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.