முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
Published on

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


ராஜபக்ச சகோதரர்கள் அரசின் உத்தரவால், 2019ல் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள், தமிழ் தேசிய கட்சியினர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக வளாகத்தில் கூடினர். ராணுவம், காவல்துறை, சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நினைவிடம் தகர்க்கப்படுவதை படம் பிடிக்கச் சென்ற செய்தியாளர் தாக்குதலுக்கு உள்ளானார்.

பல்கலைக்கழக வாளகத்தைச் சுற்றி, சிறப்பு அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இலங்கை அரசின் நடவடிக்கைக்கும், அதற்கு துணை போன யாழ்ப்பாண பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் எதிராக மாணவர்கள் உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. எனினும் எதற்கும் செவிசாய்க்காத இலங்கை அரசு, நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூணை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்துள்ள இலங்கை இனவெறிப் படையினரின் இந்த இழிசெயலை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழனத்தின் விடுதலைப் போராட்ட வீரச்சுவடுகளை முற்றாக சிதைக்கும், சிங்களர்களின் ஆதிக்கத்தை தகர்ப்போம் என்றும், தமிழர் அடையாளம் காப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல, சிங்களப் பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோர சம்பவம், வன்மையான கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். அன்றைக்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. இன்றைக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுவிடம் அழிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ள சீமான், இது தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com