ஆபாச இணையதளத்தில் தான் குளிக்கும் வீடியோ இடம்பெற்றதை அடுத்து, நட்சத்திர ஓட்டல் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், 2015 ஆம் ஆண்டு நியூயார்க் சட்டப்பள்ளியில் படிப்பை முடித்தார். வழக்கறிஞர்க ளுக்கான தேர்வுக்காக, அல்பானியில் உள்ள ஹாம்டன் இன் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அங்கு அவர் நிர்வாணமாகக் குளித்துள்ளார். அவர் குளிப்பது மறைவாக வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. இது அவருக்குத் தெரியாது. இந்நிலை யில், அவர் அந்த ஓட்டலில் தங்கியதை மறந்துவிட்டு வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார்.
இந்நிலையில் மூன்று வருடத்துக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் அந்த இளம் பெண்ணுக்கு ஒரு மெயில் வந்தது. அதில், ‘இது நீங்கள்தானே, சரியா?’ என்று கேட்டு ஒரு லிங்க் இருந்தது. அதை கிளிக் செய்த அவர், அவரது நிர்வாண வீடியோவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதோடு அவர் பெயரும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த மெயிலை அனுப்பியவர், இளம் பெண்ணை மிரட்டத் தொடங்கினார். இதை வெளியே பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால், பணம் தர வேண்டும் என்று கேட்டார். கண்டுகொள்ளவில்லை அந்த இளம்பெண்.
இந்நிலையில் பல ஆபாச இணையதளங்களில் அவரது அந்த நிர்வாண வீடியோ வெளியானது. அதோடு, இளம்பெண் பெயரில், போலியாக, மெயில் முகவரியை உருவாக்கி, அவரது நண்பர்கள் மற்றும் பள்ளித் தோழர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண், தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கேமராவை மறைத்துவைத்து தன்னை போல பல இளம்பெண்களின் நிர்வாண வீடியோ இங்கு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் நஷ்ட ஈடாக நூறு மில்லியன் டாலர் தர வேண்டும் என்று அதில் அப்பெண் கூறியுள்ளார்.