கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலையில் ஓட்டுநர்கள் சமீபத்தில் ஒரு கடல் சிங்கத்தைக் கண்டனர். உடனடியாக அது காயமடையக்கூடாது என்பதற்காக இரண்டு பேர் அதன் அருகில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய படங்கள் வைரலாக பரவி வருகிறது.
இதன்பின்னர் உடனடியாக அப்பகுதியில் சிக்கித் தவித்த கடல் சிங்கத்தை மீட்க சீ வேர்ல்டின் உதவியை நாடினர் அப்பகுதி மக்கள் . பிறகு கடல் சிங்கம் சாலையை விட்டு விலகி பாதுகாப்பான இடத்தில் பிடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, அந்த விலங்கு கடலுக்குத் திரும்புவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடலில் இருந்து வெகு தொலைவில் உள்ள நெடுஞ்சாலைக்கு கடல் விலங்கு எப்படி வந்தது என்று நிபுணர்கள் இன்னும் ஆச்சரியப்படுகிறார்கள்.
அழகான தோற்றம் இருந்தபோதிலும், கடல் சிங்கங்கள் ஆபத்தானவை. எனவே, மனித குடியிருப்புகளுக்கு அருகில் ஒரு கடல் சிங்கம் இருப்பது விலங்கு மற்றும் மனிதர்களை ஆபத்தில் ஆழ்த்தும்.