கொரோனா பாதிப்பை பத்து நிமிடத்தில் கண்டறியும் சென்சார்: ஆய்வாளர்கள் முயற்சி

கொரோனா பாதிப்பை பத்து நிமிடத்தில் கண்டறியும் சென்சார்: ஆய்வாளர்கள் முயற்சி
கொரோனா பாதிப்பை பத்து நிமிடத்தில் கண்டறியும் சென்சார்: ஆய்வாளர்கள் முயற்சி
Published on

சர்வதேச அளவில் கொரோனா பரிசோதனைகள் சாமான்ய மக்களால் பயன்படுத்தமுடியாத நிலையில் இருந்துவருகின்றன. அரசு சார்பில் இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் சோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. தற்போது பத்தே நிமிடத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் சென்சார் பரிசோதனைக் கருவியை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த சென்சார் கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த பரிசோதனைக் கருவி கிராஃபேன் உதவியுடன் தயாரிக்கப்பட்ட மற்றோரு சென்சாருடன் இணைக்கப்பட்டது. அது ரத்தம், உமிழ்நீர், வியர்வையின் மூலம் நோய் பாதிப்பைக் கண்டறியும்.

ஒரு பிளாஸ்டிக் அட்டையில் அமைக்கப்பட்ட இந்த சென்சாரில் 3டி கிராஃபேன் அமைப்பு உள்ளது. பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா குறைந்துவரும் நிலையில், பல இடங்களில் நோய் பாதிப்பும் அதிகரித்தும் வருகிறது. எனவே பரிசோதனைகளை எளிமையாக செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள சென்சார் கருவி கொரோனா பரிசோதனைகளுக்கு உதவும் எனக் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com