திமிங்கலங்கள் பிரம்மாண்டமாக வளர்வது எப்படி? ரகசியத்தை வெளிக்கொணர்ந்த ஆய்வாளர்கள்

திமிங்கலங்கள் பிரம்மாண்டமாக வளர்வது எப்படி? ரகசியத்தை வெளிக்கொணர்ந்த ஆய்வாளர்கள்
திமிங்கலங்கள் பிரம்மாண்டமாக வளர்வது எப்படி? ரகசியத்தை வெளிக்கொணர்ந்த ஆய்வாளர்கள்
Published on

உலகின் மிகப்பெரிய உயிரினம் திமிங்கலம். நன்கு வளர்ந்த நீலத்திமிங்கலம் கிட்டத்தட்ட 100 அடி நீளமும், சுமார் 200 டன் எடையும் கொண்ட ஒரு பிரமாண்டமான உயிரினம். ஒரு திமிங்கலத்தின் எடை சுமார் 30 ஆப்பிரிக்க யானைகளின் எடைக்கு சமமானது. இவ்வளவு பிரம்மாண்டமாக திமிங்கலங்கள் எப்படி வளர்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது.

திமிங்கலங்களின் பிரம்மாண்ட வளர்ச்சி குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திமிங்கலங்கள் வெறும் 15 அடிகளே இருந்துள்ளன. அதன் புதை படிம எலும்புகளை நாம் கைகளாலேயே தூக்கி விடலாம்.

பரிணாம வளர்ச்சியில் ஹோமோசேபியன் முதல் இன்றைய நவீன மனிதன் வரை மனித இனத்தில் உடலமைப்பிலோ, மூளை செயல்பாடுகளிலோ பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. மனிதன் வாழும் இடம், இடத்தின் சீதோஷன நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 3 மனித இனங்கள் வாழ்கிறோம். நிறம், உடல் அமைப்பு, உடல் அளவு ஆகியவை மட்டுமே வித்தியாசம். மற்றபடி மனிதன் மனிதன் தான். உலகின் பெரும்பாலான உயிரிங்கள் பரிணாம வளர்ச்சியில் குறிப்பிட்ட காலமாக மாற்றங்கள் இல்லாமல் உள்ளன. ஆனால் திமிங்கலங்கள் மட்டும் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்கிறது என்பதே ஆய்வாளர்களின் கேள்வியாக இருந்தது.

தற்போது உள்ள திமிங்கலம் தான் பூமி உருவான காலத்திலிருந்து வாழ்ந்து வரும் உயிரினங்களில் மிகப்பெரியது. இவை பிரம்மாண்ட டைனோசர்களை விடவும் பெரியது. நாம் உண்மையாகவே பிரம்மாண்ட உயிரினம் வாழும் காலத்தில் வாழ்கிறோம்.

எப்படி திமிங்கலங்கள் பிரம்மாண்டமான வளர்கின்றன:

திமிங்கலங்களின் உணவுச் சங்கிலியில் ஏற்பட்ட மாற்றமே அவைகளின் பரிணாம வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி 15 அடி நீளத்திலிருந்து 100 அடி நீளம் வரை வளரக்காரணம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பனியுக கால சிறிய திமிங்கலங்களில் இருந்து தற்போது உள்ள திமிங்கலம் வரை கிடைத்த படிம எலும்புகளை கணினியின் மூலம் உருவகப்படுத்தி, பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து இதை கண்டுபிடித்துள்ளனர்.

இதில், 4.5 மில்லியன் ஆண்டுகளிலிருந்து சில நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை கிடைத்த படிமங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கால இடைவெளியில் தான் உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்து இப்போது இருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்ட திமிங்கலம் வளர்ச்சியடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com