சாம்சங் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் துணைத்தலைவர் லீ ஜா யோங் மீதான லஞ்சப் புகார் வழக்கு தென்கொரியாவில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சியோல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும் இறுதிகட்ட விசாரணையில் லீ ஜா யோங் ஆஜரானார். அவருக்கு 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வேண்டும் என தென்கொரிய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
சாம்சங் நிறுவனத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முன்னாள் அதிபர் பார்க் ஜியோன் ஹை-க்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதே லீ ஜா யோங் மீதான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுதான் பார்க் ஜியோன் ஹை பதவியை இழக்கக் காரணமாக அமைந்தது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 27 ஆம் தேதி வழங்கப்பட வாய்ப்புள்ளது.