செர்பிய நாட்டிற்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்று மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பது சர்வதேச பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
கர்ப்பமாக உள்ள பென்கா என்ற இந்த பசுவை காப்பாற்ற #SAVE PENKA என்ற ஹேஸ்டேக்கில், உலக அளவில் சமூக வலைதளங்களில் மக்கள் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும், விலங்கின ஆர்வலர்களும் பசுவை கொல்லக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்கேரியாவைச் சேர்ந்த பென்கா என்ற பசு எல்லை தாண்டி அண்டை நாடான செர்பியாவிற்குள் நுழைந்தது. பின்னர் பசுவின் உரிமையாளரை கண்டுபிடித்து, அந்த பசு ஒப்படைக்கப்பட்டது. என்றாலும், எல்லை தாண்டி சென்றதால் நோய் தாக்குதல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற அச்சத்தால், பென்கா பசுவை கொல்ல அதிகாரிகள் முடிவெடுத்திருக்கின்றனர்.