ஏமன் நாட்டு எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி அரேபிய இளவரசர் மன்சூர் பின் முக்ரின் பலியானார்.
சவுதி அரேபிய இளவரசர் மன்சூர் பின் முக்ரின், அசிர் மாகாண துணை ஆளுநராக இருக்கிறார். முன்னாள் பட்டத்து இளவரசர் மகனான இவர், சில அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சவுதியின் தெற்கு பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் இளவரசர் கொல்லப்பட்டதாக அல் எக்பாரியா சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. அவருடன் சென்ற அதிகாரிகளின் நிலை என்ன ஆனது என்பது பற்றியும் விபத்துக்கான காரணம் பற்றியும் தகவல் தெரியவில்லை.
சவுதி இளவரசர்கள் 11 பேர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு ஏமன் எல்லையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.