ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 68 பேர் உயிரிழந்தள்ளனர்.
ஏமன்-சவுதி கூட்டுப்படை தாக்குதலால் 68 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஏமனில் உள்ள ஐ.நா.வுக்கான மனித உரிமை ஆணைய ஒருங்கிணைப்பாளர் ஜேமி மெக்கோல்ட் ரிக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேஸ் மாகாணத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப் பகுதியில் முதல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 54 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவதாக ஹொதெய்தாவில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பொதுமக்கள் உயிரிழந்து வருவதை அடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சவுதி அரேபியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.