சவுதி மன்னர், விமானத்தில் இருந்து கீழே இறங்க பயன்படுத்தும், தங்க எஸ்கலேட்டர் பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.
சவுதி அரேபியாவின் மன்னராக இருப்பவர் சல்மான் பின் அப்துலாஜிஸ். இவர் வெளிநாடுகளுக்குச் சென்றால் பரபரப்பாகிவிடும். அவருடன் குறைந்தது ஆயிரம் அதிகாரிகள் வருவார்கள். பிரத்யேக சொகுசு கார்கள் உள்ளிட்டவை கூடவே வரும். இந்த மன்னர் சமீபத்தில் ரஷ்யா சென்றார். அவர் விமானம் மாஸ்கோ விமானநிலையத்துக்கு சென்றடைந்ததும், விமானத்தில் இருந்து மன்னர் இறங்குவதற்காக சவுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட, தங்க எஸ்கலேட்டர் வரவழைக்கப்பட்டது. அதில் மன்னர் இறங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக, அந்த எஸ்கலேட்டர் நின்றுவிட்டது. மன்னர், அது சரியாகும் என்று காத்திருந்தார். ஆனால் சரியாகவில்லை. இதையடுத்து அவரை நடந்து கீழே செல்ல அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர் நடந்து கீழிறங்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.