சவுதி அரேபியாவில் நடைபெற்ற விலை உயர்ந்த சொகுசு கார்களின் கண்காட்சியில், முதன் முறையாக பெண்கள் கலந்து கொண்டு, ஆர்வமுடன் கார்களின் விவரங்களை கேட்டறிந்து வாங்கினர்.
சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகள் நடைபெற்ற தொடர் போராட்டத்திற்கு பிறகு, அந்நாட்டு மன்னர், பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியை வழங்கினார். வருடந்தோரும் சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில், சொகுசு கார்களின் பிரம்மாண்ட கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் முதன் முறையாக பெண்கள் கலந்து கொண்டு, புதிய மாடல் கார்களின் விவரங்களை கேட்டறிந்தனர். சில பெண்கள் சொகுசு கார்களில் அமர்ந்து சோதனை ஓட்டம் செய்து பார்த்தனர். மன்னரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில், கார் ஓட்டும் புகைப்படங்களை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர்.