முதல் முறையாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவுதி அரேபியா பங்கேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இஸ்லாமிய நாடாக பிரபஞ்ச அழகிப் போட்டியில் சவுதி அரபியா பங்கேற்க உள்ளது.
இதில் அந்நாடு சார்பில் 27 வயதான ரூமி அல்கஹ்தனி (RUMY ALQUHTANI) பங்கேற்க உள்ளார். இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சியில் பல சீர்த்திருந்தங்களை சவுதி மேற்கொண்டும் வரும் நிலையில் அதில் மிக முக்கியமானதாக அழகிப் போட்டியில் பங்கேற்பது பார்க்கப்படுகிறது.
ரியாத்தில் பிறந்த ரூமி, இந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான அழகிப் போட்டியில் அவர் பங்கேற்று இருந்தார். கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியில் நிகரகுவாவின்ஷெய்னிஸ் பலாசியோஸ் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.