35 வருட தடை நீக்கம்: சவுதியில் இனி சினிமா பார்க்கலாம்!

35 வருட தடை நீக்கம்: சவுதியில் இனி சினிமா பார்க்கலாம்!
35 வருட தடை நீக்கம்: சவுதியில் இனி சினிமா பார்க்கலாம்!
Published on

சவுதி அரேபியாவில் அடுத்த வருடம் முதல் சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்ற பின், பல அதிரடி சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதை தளர்த்தி, பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளித்தார். தேசிய தினத்தில் ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சவுதியில் 35 ஆண்டுகளாக சினிமா திரையிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த தடையை பட்டத்து இளவரசர் நீக்கியுள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் முதல் படங்கள் திரையிடப்படும் என கூறப்படுகிறது. இதுபற்றி சவுதி அரேபியாவின் கலாசார அமைச்சர் அவாத் அல்வாத் கூறும்போது, ‘தியேட்டர்களை இங்கு திறப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும்’ என்றார். 

முதலில் 300 தியேட்டர்கள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் 2030-ம் ஆண்டுக்குள் இது 2000 ஆக உயர்த்தப்படும் என்றும் சவுதி தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com