பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியா உதவுகிறது: ஈரான் அதிபர் நேரடி குற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியா உதவுகிறது: ஈரான் அதிபர் நேரடி குற்றச்சாட்டு
பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியா உதவுகிறது: ஈரான் அதிபர் நேரடி குற்றச்சாட்டு
Published on

ஏமனில் பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியா உதவுவதாக ஈரான் அதிபர் ரொஹானி நேரடியாகக் குற்றம்சாட்டி இருக்கிறார்.

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுக்கும், புரட்சிப் படையினருக்கும் நடந்து வரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், அரசுத் தொலைக்காட்சியில் பேசிய ஈரான் அதிபர் ரொஹானி, பயங்கரவாதிகளுக்கு உதவுவதை சவுதி அரேபியா நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டை ஈரான் ஒருபோதும் மீறாது. 2015 ஆம் ஆண்டு முதல் ஏமனில் நடந்து வரும் சண்டையில், அரசுப் படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபியா குண்டுகளை வீசி வருகிறது. ஈரான் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்து வருகிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com