பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி!

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி!
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை: ஒப்புக்கொண்டது சவுதி!
Published on

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் கொல்லப்பட்டார் என்பதை சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. 

சவுதி மன்னர், சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதி வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி (59). இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2 ஆம் தேதி சென்ற அவர், அதன் பிறகு மாயமானார். அவர் அந்த தூதரகத்துக்குள்ளேயே சவுதி அரேபிய அரசால் அவர் கொல்லப்பட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை சவுதி அரேபிய அரசு மறுத்து வந்தது.

ஆனால், வெளிநாட்டு ஊடகங்கள் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று உறுதியாக கூறிவந்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந் தார்.

ஜமால் கஷோகி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக துருக்கி போலீஸ் அதிகாரிகளும் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அவரை சவுதி அரசு பிடித்து வைத்திருப்பதாக கருதி, அவரை விடுவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் அந்த தூதரகத்தின் முன் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில், 2 வாரங்களாக சஸ்பென்ஸ் நீடித்த நிலையில், அவர் கொல்லப்பட்டார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது சவுதி அரேபியா. இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் கஷோகிக்கும் அங்குள்ள அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த 18 பேர் கைது செய்யப்பட் டுள்ளதாகவும் 2 மூத்த தூதரக அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணை நடந்துவருவதாகவும் சவுதி அரேபியாவின் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு சவுதி அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com