சவுதி அரேபியா தலைநகர் ரியாத் விமான நிலையத்தை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணையை, இடைமறித்து தாக்கி அழித்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு சண்டை நடந்துவருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. இதையடுத்து கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபிய தலைநகர் ரியாத் விமான நிலையத்தை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர். நடுவானில் அந்த ஏவுகணையை சவுதி ராணுவம் அழித்துள்ளது.
ஏவுகணை தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், 800 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் புர்கன் 2-ஹெச் என்ற ஏவுகணையை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் ரியாத் விமான நிலையத்தில் இருந்த பயணிகள், பயங்கர சத்தத்தை தாங்கள் கேட்டதாகவும் தூரத்தில் கரும்புகை வானத்தில் எழுந்ததாகவும் இதனால் விமான நிலையம் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.