எலன் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் அனுப்பிய 49 செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் மின்காந்த புயலால் சேதமடைந்துள்ளன.
அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக, எலன் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் 49 செயற்கைக்கோள்களை அண்மையில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. இந்நிலையில் விண்வெளியில் ஏற்பட்ட மின்காந்த புயலால் 49 செயற்கைக்கோள்களில் 40 செயற்கைக்கோள்கள் சேதமடைந்துள்ளன. புவிக்கு மிக நெருக்கமாக இவை நிறுத்தப்பட்டிருந்ததால், இதனால் புவிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இந்த செயற்கைக்கோள்களால் புவிக்கு ஆபத்து இல்லை என ஸ்டார் லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.