சாம்சங் துணைத் தலைவருக்கு ஊழல் வழக்கில் கைது நெருக்கடி

சாம்சங் துணைத் தலைவருக்கு ஊழல் வழக்கில் கைது நெருக்கடி
சாம்சங் துணைத் தலைவருக்கு ஊழல் வழக்கில் கைது நெருக்கடி
Published on

மின்னணு சாதன உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவர் லீ ஜே யோங் கைது செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லீ ஜே யோங்கை கைது செய்யவதற்கு அனுமதி வழங்கக் கோரி நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதற்காக எம்.பி.க்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் சாம்சங் நிறுவனத்தின் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான குற்றச்சாட்டில்தான் முன்னாள் அதிபர் பார் கியான் ஹே, பதவியில் இருந்து அகற்றப்பட்டார். விரைவில் சாம்சங் நிறுவனத்தின் முழுப் பொறுப்பையும் லீ ஜே யோங் ஏற்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com