விண்வெளியை அடைந்த முதல் மனிதர் யூரி ககாரின் - 60 ஆண்டுகள் நிறைவு

விண்வெளியை அடைந்த முதல் மனிதர் யூரி ககாரின் - 60 ஆண்டுகள் நிறைவு
விண்வெளியை அடைந்த முதல் மனிதர் யூரி ககாரின் - 60 ஆண்டுகள் நிறைவு
Published on

விண்வெளியை அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையை ரஷ்யாவின் யூரி ககாரின் படைத்து 60 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அந்நாட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெலிகி நோவோகிராடு பகுதியில் DRONE எனப்படும் சிறு ரக விமானங்கள் ராக்கெட் வடிவில் விண்ணை நோக்கி பறந்தது கண்கவரும் வகையில் அமைந்தது. அதை அந்நகரத்தில் வசிப்போர் கண்டுகளித்தனர். ராக்கெட் தவிர செயற்கைக்கோள், புவி சுற்றுவட்டப்பாதை ஆகிய வடிவங்களிலும் ட்ரோன்கள் அணிவகுத்து பறந்தன. மேலும் யூரி ககாரின் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து பூமியில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை ரஷ்ய அதிபர் புடின் பார்வையிட்டார்.

விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்வதில் கடந்த 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா - ரஷ்யா இடையே கடும் போட்டி நிலவியது. அதன் ஒரு பகுதியாக யூரி ககாரினை ரஷ்யா விண்வெளிக்கு அனுப்பியது. 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வோஸ்டாக் 1 என்ற பிரத்யேக விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்ற ககாரின் 108 நிமிடங்கள் பூமியை சுற்றி வந்தார். இது அந்தக்காலத்தில் மிகப்பெரும் சாதனையாக கருதப்பட்டது. மேலும் விண்வெளியை அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையையும் யூரி ககாரின் பெற்றார். இந்நிகழ்வின் 60ஆவது நினைவுநாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com