புற்றுநோய் தீவிரத்தால் அதிபர் விளாடிமிர் புடின் மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என மருத்துவர்கள் கெடு விதித்துள்ளதாக ரஷ்ய உளவுத்துறை அதிகாரி அனுப்பிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
புடினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. இதுவரை எதையும் ரஷ்ய அரசு தரப்பு உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து மற்றொரு அண்மைத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இண்டிபெண்டன்ட் இதழில் ரஷ்ய உளவாளி அளித்த தகவல் பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
அந்த உளவாளி கூற்றின்படி, ரஷ்ய அதிபர் புடினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அவர் 3 ஆண்டுகள் வரை உயிர் வாழலாம் என்று கணித்துள்ளதாகவும் அந்த உளவாளி தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் இதுபோன்ற எந்த ஒரு உபாதையும் அதிபர் புடினுக்கு இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.