வியட்நாம் சென்ற புதின்.. விரும்பாத அமெரிக்கா.. சந்திப்பில் நடந்தது என்ன.. உற்றுநோக்கும் உலக நாடுகள்!

வடகொரியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, அடுத்ததாக ரஷ்ய அதிபர் வியட்நாம் சென்றார்.
ரஷ்யா - வியட்நாம் அதிபர்கள்
ரஷ்யா - வியட்நாம் அதிபர்கள்எக்ஸ் தளம்
Published on

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா சென்ற புதினை, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கூட்டாண்மை ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

இதையும் படிக்க; கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன்.. குறுக்கிட்ட அமலாக்கத்துறை.. நிறுத்திவைத்த டெல்லி உயர்நீதிமன்றம்!

ரஷ்யா - வியட்நாம் அதிபர்கள்
24 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம்.. வடகொரிய அதிபரைச் சந்தித்த புதின்.. உற்றுநோக்கும் அமெரிக்கா!

இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான கலாசாரம், விவசாயம், பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதற்கு ஈடாக, வடகொரியா உணவு, எரிபொருள் தேவையை நிவர்த்திசெய்யும் எனவும், விண்வெளி தொழில்நுட்பத்தில் வடகொரியா ரஷ்யாவின் உதவியை கோரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இந்தச் சந்திப்புக்குப் பிறகு புடின் ஓட்டிய காரில் கிம் ஜாங் உன் பயணித்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின்னர், வடகொரியா பயணத்தை முடித்துக்கொண்ட புதின், அங்கிருந்து வியட்நாம் புறப்பட்டார். நேற்று வியட்நாமில் பல முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கு இடையே கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் மேலும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்தானது.

இதையும் படிக்க: Head Coach|அடுத்த ஜிம்பாப்வே தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண்; பிசிசிஐக்கு கண்டிஷன் போட்ட கவுதம் கம்பீர்!

ரஷ்யா - வியட்நாம் அதிபர்கள்
’உக்ரைனுடன் போரை நிறுத்துகிறேன்..பேச்சுவார்த்தைக்கும் ரெடி; ஆனால்..’ - புதின் போடும் மாஸ்டர் பிளான்!

புதினின் பயணம் குறித்து, வில்சன் மையத்தின் ஆசிய திட்டத்தின் சக பிரசாந்த் பரமேஸ்வரன், “வியட்நாம் ஒரு முக்கிய பாரம்பரிய உறவை வலுப்படுத்தி வருகிறது, அது புதிய பங்காளிகளுடன் உறவுகளை வேறுபடுத்துகிறது. வியட்நாமுக்கு அதன் பொருளாதார அபிலாஷைகளை முன்னேற்றுவதற்கும், அதன் பாதுகாப்பு உறவுகளை பன்முகப்படுத்துவதற்கும் அமெரிக்காவின் ஆதரவு தேவை. வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில், அது ரஷ்யாவுடன் என்ன செய்கிறது என்பதை கவனமாக அளவீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரின் ISEAS-Yusof Ishak நிறுவனத்தின் ஆய்வாளர் Nguyen Khac Giang, ”புதினின் சமீபத்திய சீனா, வடகொரியா மற்றும் வியட்நாம் பயணங்கள், சர்வதேச தனிமைப்படுத்தலை உடைக்கும் முயற்சி” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?

ரஷ்யா - வியட்நாம் அதிபர்கள்
துண்டுப் பிரசுரங்கள் வீசியதற்குப் பதிலடி.. 700 குப்பைப் பலூன்களை தென்கொரியாவுக்கு அனுப்பிய வடகொரியா!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் வியட்நாம் நடுநிலை வகித்தது. ஆனால் வியட்நாமில் உள்ள அமெரிக்க தூதரகம் புடினின் வருகையை விமர்சித்த நிலையில், நடுநிலைமை தந்திரமாகி எனப் பேசுபொருளாகி இருக்கிறது. புடினை சுதந்திரமாக பயணிக்க அனுமதித்தால், அது ரஷ்யாவின் அப்பட்டமான சர்வதேச சட்ட மீறல்களை இயல்பாக்கிவிடும் என உலக நாடுகள் விமர்சித்துள்ளன.

முன்னதாக, ரஷ்யாவிற்கும் வியட்நாமிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2023இல் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது சீனாவுடனான 171 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் அமெரிக்காவுடன் 111 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடப்பட்டது.

இதையும் படிக்க: ஆந்திரா| ஆட்டம் ஆரம்பம்.. ஜெகன் கட்டிய அரண்மனை பங்களா.. குறிவைத்த சந்திரபாபு நாயுடு! பழிக்குப்பழியா?

ரஷ்யா - வியட்நாம் அதிபர்கள்
வியட்நாம் | மிகப்பெரிய மோசடி வழக்கு.. பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com