தேர்தல் விதிமுறை மீறல் வழக்கில் அபராதம் விதித்த நீதிபதிகளை சிறையில் அடைப்பேன் என ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி சவால் விட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் புடினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்ஸி நாவலின்-க்கு சுமார் 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் இரண்டு பிரம்மாண்டப் பேரணிகள் நடத்திய நாவல்னி, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருந்தார். பேரணிகளை நடத்தும்போது விதிமுறைகள் மீறப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிபர் புடின் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலெக்ஸி நாவலின் இதுகுறித்து பேசும் போது, அபராதம் விதிக்கட்டும், நாம் நமது பிரச்சாரத்தை தொடருவோம், நம் துண்டுப்பிரசுரங்களை அவர்கள் திருடட்டும், நாம் நமது பிரச்சாரத்தை தொடருவோம், நம் அலுவலகத்தை அவர்கள் மூடட்டும், நாம் நாம் பிரச்சாரத்தை தொடருவோம், அவர்கள் நம்மை கைது செய்தாலும் நாம் நமது பிரச்சாரத்தை தொடர வேண்டும். ஏனென்றால் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நமது பக்கம் உண்மை உள்ளது. நம்மை எதிர்ப்பதற்கு அவர்களிடம் எந்த ஆயுதமும் இல்லை, அதனால் நீதிமன்றத்தின் மூலம் நம்மை முடக்கப்பார்க்கிறார்கள். இந்த அபராதங்கள் அனைத்தும் சிறையில் அடைக்கப்பட்ட பின் நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் என்று கூறினார்.