அதிநவீன போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா

அதிநவீன போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா
அதிநவீன போர் விமானத்தை அறிமுகம் செய்த ரஷ்யா
Published on

ரஷ்யா அரசு தங்களின் அதிநவீன போர் விமானத்தை முதன்முறையாக வெளியுலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.

CHECKMATE என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானம் மாஸ்கோ அருகே நடந்த விமான கண்காட்சி மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. சுகோய் நிறுவனம் தயாரித்துள்ள இந்த போர் விமானம், குறைந்த எடையுடன் அனைத்து சூழல்களிலும் சண்டையிடும் திறன் கொண்டது.

2023ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் இது பயன்பாடுக்கு வரும் என்றும் 2026ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விற்கப்படும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. ஒற்றை என்ஜினில் இயங்கும் இந்த போர் விமானம் ஒலியை விட இருமடங்கு வேகமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com