ரஷ்யாவில் இன்ஸ்டாகிராம் சமூக தள பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ரஷ்யப் படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்துகள் பதிவிடப்படுவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார். ரஷ்யா ஏற்கெனவே ஃபேஸ்புக் தளத்திற்கும் தடை விதித்துள்ளது. ட்விட்டர் தளத்தையும் பகுதியளவே அனுமதித்துள்ளது.
இதற்கிடையே ரஷ்ய அரசு சேனல்களை தங்கள் தளம் மூலம் உலகெங்கும் ஒளிபரப்பப்படுவதற்கு யூடியூப் தடை விதித்துள்ளது. ரஷ்ய அரசு ஊடகங்கள் தங்கள் தளத்தை பயன்படுத்த ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமும் ஏற்கெனவே தடை விதித்துள்ளன. இதற்கிடையே வணிகத்திற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யாவை அமெரிக்கா நீக்கியுள்ளது. அதனால் ரஷ்யாவிற்கு பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.