உக்ரைனில் ரசாயன ஆலையில் தாக்குதல் - 2.5 கி.மீ.க்கு கசிந்த அம்மோனியா வாயு!

உக்ரைனில் ரசாயன ஆலையில் தாக்குதல் - 2.5 கி.மீ.க்கு கசிந்த அம்மோனியா வாயு!

உக்ரைனில் ரசாயன ஆலையில் தாக்குதல் - 2.5 கி.மீ.க்கு கசிந்த அம்மோனியா வாயு!
Published on

உக்ரைனில் இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் ரசாயன ஆலையில் சேதம் ஏற்பட்டு 2.5 கி.மீ தொலைவுக்கு அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.

உக்ரைன் மீது 3 வாரங்களுக்கு மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 900க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் ராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர். நேற்று ஐரோப்பாவின் மிகப்பெரிய இரும்பு மற்றும் எஃகு ஆலை மீது ரஷ்யா தாக்கு நடத்தி அழித்தது. இன்று சுமி நகரத்தின் மீது அதிகாலையே வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் சுமிகிம்ப்ரோம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த ஆலையில் இருந்து அம்மோனியா வாயு கசியத் துவங்கியுள்ளது. 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அம்மோனியா வாயு கசிவு பரவியுள்ளது என உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வாயுக்கசிவு அதிகமாக இருப்பதால் நகரில் உள்ள பொதுமக்கள் வீட்டை வெளியே வரவேண்டாம் என சுமி நகர கவர்னர் ஓபிளாஸ்ட் டிமிட்ரோ ஜிவித்ஸ்கி தெரிவித்துள்ளார். நிலைமை சீராகும்வரை ஜன்னல்களை கூட திறக்கவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com