ஆடி கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ருபர்ட் ஸ்டாட்லர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த பிரபல வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் ஆடி சொகுசு கார்கள். ஆடம்பர சொகுசு காரான ஆடி, வோக்ஸ்வேகன் நிறுவனதின் கீழ் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆடி கார் நிறுவனம் டீசல் எமிஷன் (புகை வெளியேற்றி) விவரங்களை மறைப்பதற்காக தங்கள் தயாரிக்கும் சொகுசு கார்களில் நவீன சாப்ட்வேர் கருவிகளை பொருத்தி சுற்றுச்சூழலை அதிக மாசு ஏற்படுத்தியதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆடி கார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ருபர்ட் ஸ்டாட்லர் பொய்யாக ஏமாற்றி விளம்பரம் செய்து தனது கார்களை விற்று மோசடியில் ஈடிபட்டடுள்ளார் என்று அவர் மீது வழக்குப் போடப்பட்டது.
இந்நிலையில் ஜெர்மனி முனிச் நகர நீதிமன்றத்தில் கடந்த வாரம் இந்த வழக்கின் மீதான விசாரணை வந்தபோது, டீசல் எமிஷன் விவகாரத்தில் ஸ்டாட்லர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற காரணத்திற்காக அவரை கைது செய்ய நீதிபதி உத்தவிட்டடார். எனவே ஸ்டாட்லர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். மேலும் அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் மேல் வோல்க்ஸ்வேகன் கார்கள் விற்கப்பட்டுள்ளது. அதில் டீசல் எமிஷன் கார்களில் நவீன சாப்ட்வேர் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது.
எனவே இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகம் முழுதும் உள்ள 1 கோடியே 10 லட்சம் வோக்ஸ்வேகன் கார்களில் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிகப்படுகிறது.இதனைதொடந்து ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இந்நிறுவன கார்களை அனுமதி செய்ய போலியான ஆவனங்களை உருவக்கியதும் ஸ்டாட்லர் தான் என்பது தெரியவந்துள்ளது. மேலும் போர்ச்,ஸ்கோடா,சீட் ஆகிய கார்களிலும் இதுபோல நடந்து இருப்பாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.